இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் பொன்.செல்வராசா காலமானார்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன் செல்வராசா ஐயா அவர்கள் இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு தமிழரசுக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தனது சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
அவரது பூதவுடல் மட்டக்களப்பு உள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கிரியைகள் 15.10.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணியளவில் இடம்பெற்று, மட்டக்களப்பு கல்லியங்காடு இந்து மாயன் மின்தகன வீதியில் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.