மாத்தறை மாவட்டத்தில் புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றுபவர்களுக்கு இடையூறு ஏற்படாது!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
மாத்தறை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை புலமைப்பரிசில் பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்தாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அழைப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழையால் மாத்தறை மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் கூட சில நாட்களுக்கு மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.