ஆப்கான் மசூதியில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

#Death #Afghanistan #BombBlast #Rescue #Mosque
Prasu
2 years ago
ஆப்கான் மசூதியில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஷியா மசூதியில் இன்று தொழுகைக்கு வந்த வழிபாட்டாளர்கள் மத்தியில் இருந்த ஒருவர் நடத்திய தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 

மேலும் 15 பேர் காயமடைந்தனர். பாக்லான் மாகாணத்தின் தலைநகர் போல்-இ-கோம்ரி நகரில் இந்த தாக்குதல் நடந்ததாக போலீஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

கடந்த 2021-ம் ஆண்டு தலீபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு கொராசன் மாகாணத்தில் இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படும் ஐஎஸ்-ன் பிராந்திய துணை அமைப்பு, நாடு முழுவதும் உள்ள மசூதிகள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நடத்தி வருகிறது. 

இந்த தாக்குதலுக்கு பின்னாலும் அந்த அமைப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!