இஸ்ரேல் செல்லவுள்ள அமெரிக்க ராணுவ மந்திரி

#America #Minister #Israel #War #Visit #Hamas
Prasu
2 years ago
இஸ்ரேல் செல்லவுள்ள அமெரிக்க ராணுவ மந்திரி

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் மூண்டுள்ளது. இதில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து ஆயுதங்களை வழங்கி உள்ளது. 

மேலும் அமெரிக்காவின் போர் கப்பல் இஸ்ரேலுக்கு சென்றது. நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு சென்றார்.

அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார். இந்த நிலையில் அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் இன்று இஸ்ரேலுக்கு செல்ல உள்ளார். 

அவர், இஸ்ரேல் பிரதமர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இது தொடர்பாக அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின், இஸ்ரேல் தலைவர்களுடன் அவர்களின் செயல்பாட்டு திட்டம், இந்த மோதலுக்கான அவர்களின் நோக்கங்கள் குறித்து பேசுவார். 

இஸ்ரேலின் பாதுகாப்பு உதவி, தேவைகள் குறித்து விவாதிப்பார் என்றார். முன்னதாக லாயிட் ஆஸ்டின் கூறும் போது, இஸ்ரேலுக்காக பாதுகாப்பு உதவிக்கு அமெரிக்க ராணுவம் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. 

ஹமாசுக்கு எதிரான போரை தொடர இஸ்ரேல் ராணுவம் சரியான முறையில் செயல்படும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4