திருப்பதி கோவிலில் நாளை முதல் சிறப்பு தரிசனங்கள் ரத்து

#Temple #Tamil People #people #Thirumal #2023 #Tamilnews #ImportantNews
Mani
2 years ago
திருப்பதி கோவிலில் நாளை முதல் சிறப்பு தரிசனங்கள் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நவராத்திரி பிரமோற்சவ விழா நடைபெற உள்ளது. பிரமோற்சவ விழாவையொட்டி நாளை அங்குராற்பனமும் மறுநாள் கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் கோலாகலமாக தொடங்குகிறது.

பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நாளை முதல் அதிக அளவு சாதாரண பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஒரு வயது உட்பட்ட குழந்தைகளுடன் வருபவர்களுக்கான சிறப்பு தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால் இலவச தரிசனத்திற்கு நேரம் குறையும்.

ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் இரவு 7 மணிக்கு கருடசேவை நடைபெறுவது வழக்கம். வரும் 19ம் தேதி ஆகம விதிகளில்படி 30 நிமிடங்களுக்கு முன்னதாக காலை 6.30 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வருகிறார். பிரமோற்சவ விழாவை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து நாளை முதல் 26ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆந்திர அரசு போக்குவரத்து கழகம் திருப்பதியில் இருந்து வேலூருக்கு 85 சிறப்பு பேருந்துகளையும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 35 பேருந்துகளையும் இயக்குகிறது. சென்னையில் இருந்து திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை 85 முதல் 90 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

ஜனவரி மாதத்திற்கான ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்டுக்கள் வருகிற 24-ந்தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. மற்றும் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

நேற்று திருப்பதிக்கு மொத்தம் 65,937 பேர் வந்துள்ளனர். இதில், 24,101 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி, உண்டியல் காணிக்கையாக ரூ.4.28 கோடி வசூலானது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4