தேர்தல்கள் ஒத்திவைக்கப்படமாட்டாது- பொதுஜன பெரமுன
#SriLanka
#Election
#Election Commission
Mayoorikka
2 years ago
அடுத்த மாகாண சபைத் தேர்தலும் ஜனாதிபதித் தேர்தலும் ஒத்திவைக்கப்படாமல் நடைபெறும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் உரிய நேரத்தில் இயல்பாகவே நடத்தப்படும் என்பதால், எந்தக் கட்சிக்கும் அதனை ஒத்திவைக்க வாய்ப்பில்லை என அதன் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன சுட்டிக்காட்டினார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.