பீகார் ரயில் விபத்துக்கான காரணம் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த தகவல்

#India #Tamil Nadu #swissnews #2023 #Tamilnews #Breakingnews
Mani
2 years ago
பீகார் ரயில் விபத்துக்கான காரணம் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த தகவல்

நேற்றிரவு டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் விரைவு ரெயிலின் 6 பெட்டி பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை இன்னும் நடந்து வருகிறது. இந்த நிலையில் முதற்கட்ட விசாரணையில் தண்டவாளத்தில் ஏற்பட்ட கோளாறே ரயில் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இதுதவிர ரயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த சமயத்தில், திடீரென ரயிலை நிறுத்துவதற்கு பிரேக்-ஐ அழுத்தியதால், ரெயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

நான் எழுதுவதில் மும்முரமாக இருந்தபோது திடீரென ரயில் ஓட்டுநர் பிரேக் அழுத்தியதாக உணர்ந்தேன். பிறகு, ரெயிலில் அதிர்வுகள் ஏற்பட்டு பின் மயக்கமுற்றேன். அப்போது கிராம மக்கள் என் முகத்தில் தண்ணீரைத் தெளித்தனர்” என்று ரயிலில் இருந்த பயணி விஜய்குமார் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4