அதிகரித்துள்ள பாதாள உலககுழு நடமாட்டம் - நியமிக்கப்படாத பொலிஸ்மா அதிபர்!
#SriLanka
#srilankan politics
PriyaRam
2 years ago
நாட்டில் பாதாளக் குழுவினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஆனால் இதுவரை பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் இவ்வாறு பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படாதமை இது இரண்டாவது தடவையாகும்.
ந்நிலையில், இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என கேள்வியெழுப்பியுள்ளார்.
ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக கடந்த காலங்களில் எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், எமது நாட்டில் பொலிஸ்மா அதிபர் ஒருவர் இல்லை. எனவே, அரசாங்கம் உடனடியாக பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டும் என ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.