கடற்கரையில் வீசப்பட்டிருந்த மனித தலையால் பரபரப்பு!
#SriLanka
#Colombo
#Police
#Investigations
PriyaRam
2 years ago
பமுனுகம பழைய அம்பலம கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி இந்த மனித தலை கண்டு பிடிக்கப்பட்டது.
இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்ட தலை அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தலை தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட உள்ளதுடன், பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.