புதுக்குடியிருப்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வாகன சாரதிகள்!

#SriLanka #Arrest #vehicle
Mayoorikka
2 years ago
புதுக்குடியிருப்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வாகன சாரதிகள்!

புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து முதிரை மரக்குற்றிகளை ஏற்றி பயணித்த கப் ரக வாகனத்துடன், தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெத்தலியாற்று பகுதியில் வைத்து, வாகன சாரதி உதவியாளர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 தருமபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, இன்றையதினம் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

images/content-image/2023/10/1697088176.jpg

 அத்துடன் இன்றையதினம், நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வாகனம் ஒன்றினையும் பொலிஸார் கைப்பற்றினர். 

images/content-image/2023/10/1697088133.jpg

அத்துடன் சந்தேகநபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரையும் இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சதுரங்க தெரிவித்துள்ளார்.

images/content-image/2023/10/1697088106.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!