மெட்டியகொட, மஹவத்த வீதி பகுதியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!

#SriLanka #Lanka4 #GunShoot #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மெட்டியகொட, மஹவத்த வீதி பகுதியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!

மெட்டியகொட, மஹவத்த வீதி பகுதியில் இன்று (12.10) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த நபர் காயமடைந்த நிலையில், பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளதாக அறவிக்கப்பட்டுள்ளது. 

வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

கடந்த ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி ரத்கம பிரதேசத்தில் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் பாலேந்திரசிங்க சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வீடொன்றில் தங்கியிருப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்திருந்தது.  

அதன்படி அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான இடத்தை சோதனை செய்த போது, ​​அங்கு தங்கியிருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டதையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் பதில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், குறித்த நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் எல்பிட்டிய மாவட்டத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகரின்  நேரடி மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!