பதினாறு வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது
பதினாறு வயதுடைய பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரபல பாடசாலை ஒன்றில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளால் நேற்றுமுன்தினம் (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் திஸ்ஸமஹாராம பிரதேசத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நாற்பத்திரண்டு வயதுடைய ஆசிரியரே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு பிரபலமான ஆசிரியர் எனவும் யிற்சி வகுப்புகளை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்குரிய ஆசிரியர் அப்பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பணிபுரியும் போதுஇ அந்தப் பாடசாலையில் பதினொறாம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுமி ஒருவரும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமி துஷ்பிரயோகம் தொடர்பில் பாடசாலை அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்ததையடுத்து திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் பாடசாலைக்கு வந்து சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்து சந்தேகத்திற்குரிய ஆசிரியரை கைது செய்துள்ளனர்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையில் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.