வாக்குகளை நீங்கள் இழப்பீர்கள்: ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் காட்டமான கடிதம்

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago
வாக்குகளை நீங்கள் இழப்பீர்கள்: ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் காட்டமான கடிதம்

தமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி, காலத்தை இழுத்தடித்து வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், எதிர்வரும் தேர்தலில் சிங்களவர்கள் அல்லாதவர்களின் கணிசமான வாக்குகளை நீங்கள் இழப்பீர்கள். 

சிங்கள வாக்குகள் சிங்கள வேட்பாளர்கள் மத்தியில் பிரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

 தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

 அண்மைக்கால வெளிநாட்டு விஜயத்தின் நீங்கள் பெற்ற முழு வெற்றியையுமே நீங்கள் ஜேர்மன் ஊடகவியலாளருக்கு அளித்த பேட்டி அப்படியே களங்கப்படுத்தி விட்டது. 

நீங்கள் கடும் போக்குவாத சிங்கள வாக்காளர்களின் ஆதரவை உறுதிப்படுத்துவதற்காக அப்படிச் செய்திருக்க கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 பொதுவான தமிழ் வேட்பாளர் ஒருவர் குறித்து சிந்திக்கத் தலைப்படும் நிலைமை தழிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. உறுதியளித்த பல விடயங்களை நீங்கள் நிறைவேற்ற தவறிவிட்டீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ள விக்னேஸ்வரன், மாகாண சபைகள் தொடர்பில் ஆலோசனை சபையை அதிகாரத்துடன் செயல்பட வைக்கும் ஏற்பாடு நடைபெறவில்லை. 

அந்த ஆலோசனைச் சபைக்கு அதிகாரம் அளிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு, அதனை செப்டம்பர் முதலாம் திகதியில் இருந்து இயக்குவதற்கும் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். 

 ஆளுநர் மாற்றம் நடக்கவில்லை. அதே ஆளுநர் மாறாமல் தொடர்கிறார். வடக்கு மாகாண பிரதம செயலாளரும், மாகாண சுகாதார பணிப்பாளரும் பதவிகளில் தொடர்கின்றனர். 

எங்கள் ஆதரவாளர்கள் இவற்றால் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!