அரசு விரைவு பேருந்துகளில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு துவக்கம்!

#India #Festival #Tamil People #people #Bus #2023 #ImportantNews #Special Day
Mani
2 years ago
அரசு விரைவு பேருந்துகளில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு துவக்கம்!

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம் செய்ய உள்ளவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.

விரைவு பஸ்களை பொறுத்தவரை 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்ய முடியும். அந்த வகையில் நவம்பர் 10-ந்தேதி பயணம் மேற்கொள்வோர் இன்று (புதன்கிழமை) முதல் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 11ஆம் தேதி பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை (வியாழக்கிழமை) தொடங்கும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் இணையதளம், www.tnstc.in, tnstc செயலி அல்லது பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூலம் முன்பதிவு செய்யலாம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4