1500 ஹமாஸ் பயங்கரவாதிகளை வீழ்த்திய இஸ்ரேல் ராணுவம்

#Death #Israel #War #Soldiers #Terrorists #Hamas
Prasu
2 years ago
1500 ஹமாஸ் பயங்கரவாதிகளை வீழ்த்திய இஸ்ரேல் ராணுவம்

ஹமாஸ் நடத்திய எதிர்பாராத தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மண்ணில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தி வருகிறது. 

அதேபோல் ஹமாஸ் எல்லையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. 3 லட்சம் ராணுவ வீரர்களை தயார் செய்து வைத்துள்ளது. கடல் வழியாக தற்போது தாக்குதலை தொடங்கியுள்ளது. 

காசாவில் இருந்து மக்களை வெளியேறும்படி வலியுறுத்தியுள்ளது. காசாவை கட்டுக்குள் கொண்டுவர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல் மண்ணில் 1500 ஹமாஸ் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 

மேலும், எல்லை பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேவேளையில் லெபனான் நாட்டின் எல்லையிலும் ராணுவத்தை குவித்து வருகிறது. இஸ்ரேல் நாட்டின் தெற்கு பகுதியை முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 நேற்று இரவில் இருந்து எல்லைத்தாண்டி ஹமாஸ் பயங்கரவாதிகள் வரவில்லை என்று ராணுவ செய்தி தொடர்பாளர் ரிச்சார்ட் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4