இஸ்ரேல் மீது ஹமாஸ் குழு தாக்குதலின் திட்டம் தீட்டி செயல்படவைக்கும் பாலஸ்தீன மூளை இவர்தான்...!

#world_news #Israel #War #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
இஸ்ரேல் மீது ஹமாஸ் குழு தாக்குதலின் திட்டம் தீட்டி செயல்படவைக்கும் பாலஸ்தீன மூளை இவர்தான்...!

காலம் காலமாக உலகின் மாற்ற முடியாத ஒரு புற்று நோயாக இருக்கும் போர்தான் பாலஸ்தீன இஸ்ரேல் போராகும். 

 கடந்த சனிக்கிழமை காலை திடீரென இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் துவக்கிய தாக்குதல் உலகை பரபரப்படையச் செய்துள்ள நிலையில், அந்த தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர், ஏழு கொலை முயற்சிகளில் தப்பியவர் என்றும், புதிய ஒசாமா பின் லேடன் என அழைக்கப்படுபவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பல ஆண்டுகளாக இஸ்ரேலால் தேடப்பட்டுவருபவரான அவரது பெயர் Mohammed Deif (58). கொலைமுயற்சிகளின் விளைவாக இரண்டு கைகளையும் கால்களையும், ஒரு கண்ணையும் இழந்த Deif, நிரந்தரமாக சக்கர நாற்காலியிலேயே வலம்வருவதாக கூறப்படுகிறது. 

காசாவில் தரைக்குக் கீழ் அமைந்துள்ள சுரங்கங்களில் மறைந்து வாழ்ந்துவரும், அல்லது அடிக்கடி தான் தங்குமிடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும் Deif உடைய ஒரே ஒரு புகைப்படம்தான் இதுவரை வெளியாகியுள்ளது. 

 இவர் ஒரு பாலஸ்தீன அகதிகள் முகாமில் பிறந்தவர். சிறு வயதிலேயே, ஆன்மீகத்திலும், நாட்டிலும் பற்றிக்கொண்டவர். அகதிகள் முகாமில் பிறந்த அவர், தனது பெயரை Deif என மாற்றிக்கொண்டாராம். Deif என்பதற்கு அதிதி அல்லது விருந்தினர் என்று பொருள். அதாவது, தான் நிரந்தரமாக ஓரு வீட்டில் தங்குவதில்லை என்னும் பொருளில் அவர் அந்த பெயரை வைத்துக்கொண்டுள்ளார்.  

அவரது இயற்பெயர், Mohammed Diab Ibrahim al-Masri. 1965ஆம் ஆண்டு காசாவில் பிறந்தவர் இந்த Deif. ஹமாஸின் ராணுவப் பிரிவான al-Qassam brigadesஇன் தளபதி என்ற முறையில், தனது வீரர்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்து கொல்வதையும், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கடத்துவதையும் வீடியோவாக பதிவு செய்து அந்த காட்சிகளை வெளியிட்டுள்ளார் Deif. ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி, சுவர்களை அழியுங்கள் என பாலஸ்தீனர்களை வலியுறுத்தியுள்ளவர் இவர்தானாம். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4