டிப்பர் வாகனம் மோதியதில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி!

#SriLanka #Accident #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
டிப்பர் வாகனம் மோதியதில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி!

கொழும்பு குருநாகல் வீதியில் புஹுரிய சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரவு ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த விபத்துநேற்று (09) இரவு  இடம்பெற்றுள்ளது. 

பொல்கஹவெல பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீதிக்கு அருகில் இரவு நேர நடமாடும் கெப் வண்டியை நிறுத்தி வீதியில் பயணித்த வாகனங்களையும் மக்களையும் சோதனையிட்டனர்.  

அப்போது, ​​கந்தளேயிலிருந்து கடுவெல நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம், வீதியோரத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் படுகாயமடைந்த அவர்,  பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். 

பொல்கஹவெல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 45 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!