வவுனியா வெளிக்குளம் பகுதியில் வாகன விபத்து : இருவர் பலி!

#SriLanka #Vavuniya #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வவுனியா வெளிக்குளம் பகுதியில் வாகன விபத்து : இருவர் பலி!

வவுனியா, வெளிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் அங்கு பயணித்த 5 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்த விபத்து நேற்று (09.10) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மழையின் போது பொலிஸ் விசேட அதிரடிப்படை ஜீப் ஒன்று வீதியில் சென்ற கறவை மாடு ஒன்றின் மீது மோதியதில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

வவுனியா, மடுகந்தவில் அமைந்துள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த இரண்டு இராணுவத்தினரே உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் குருநாகல் மற்றும் மதவாச்சி பிரதேசங்களைச் சேர்ந்த 29 மற்றும் 31 வயதுடையவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர். 

காயமடைந்த இராணுவத்தினர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும்  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!