காசா எல்லையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!

#world_news #Israel #War
Mayoorikka
1 year ago
காசா எல்லையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக  இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!

காசா எல்லையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

 இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென எதிர்பாராத வகையில் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தினர்.

 இதனால் ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் தொடங்கியது. ஹமாஸ் தாக்குதலுக்குப் பதிலடியாக காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

 நாங்கள் போரில் இருக்கிறோம். அதனால், பேச்சுவார்த்தைக்கோ அல்லது மத்தியஸ்தம் செய்வதற்கோ உரிய தருணம் இது இல்லை.

 நாங்கள் இன்னும் எங்களுடைய எல்லை பகுதியை பாதுகாக்க முயற்சித்து வருகிறோம் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.

 இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் உள்ள அப்பாவி மக்களை காக்க போராடி வருகிறோம் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. மேலும், அப்பாவி மக்களை கொல்வது குற்றமாகும் எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!