இலங்கையில் சீரற்ற வானிலையால் 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

#SriLanka #weather #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையில் சீரற்ற வானிலையால் 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

சீரற்ற காலநிலையினால் தீவின் பல மாவட்டங்களில் 18,898 குடும்பங்களைச் சேர்ந்த 71,320 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, மாத்தறை, காலி, நுவரெலியா, புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 555 குடும்பங்களைச் சேர்ந்த 1,910 பேர் 16 பாதுகாப்பான இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அனர்த்தம் காரணமாக 12 வீடுகள் முழுமையாகவும், 1,004 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.  

இதேவேளை, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பு இன்று (09.10) பிற்பகல் 3 மணி வரை அமலில் இருக்கும் என்றும் சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள மாவட்டங்களில் பல பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4