ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் : ஏறக்குறைய 2000 பேர் உயிரிழப்பு!

#Afghanistan #world_news #Earthquake #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் : ஏறக்குறைய 2000 பேர் உயிரிழப்பு!

மேற்கு ஆப்கானிஸ்தானை உலுக்கிய வலுவான நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000 ஆக உயர்ந்துள்ளதாக தலிபான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் இன்று (08.10) அறிவித்தார்.

மேற்கு ஆப்கானிஸ்தானில் நேற்று 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியது. இதனையடுத்து உயிரிழந்தவர்களின் டஜன் கணக்காக உயர்ந்துள்ளதாகநாட்டின் தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆனால் தகவல் மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் வாஹித் ராயன் கூறுகையில், ஹெராட்டில் நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை முதலில் அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளது எனவும் சுமார் ஆறு கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இடிபாடுகளுக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அவசர உதவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4