இஸ்ரேலுக்கான விமான சேவைகள் நிறுத்தம்!
#world_news
#Israel
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
உலகின் முன்னணி விமான நிறுவனங்கள் இஸ்ரேலுக்கான விமான சேவைகளை நிறுத்தியுள்ளன.
பாலஸ்தீன ஹமாஸ் கிளர்ச்சிக் குழு இஸ்ரேலில் பெரிய அளவில் தாக்குதல் நடத்திவருவதால் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி American Airlines, Air France, Lufthansa, Emirates, Ryanair, Aegean Airlines உள்ளிட்ட நிறுவனங்கள் விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன. அது குறித்த தகவல் டெல் அவீவ் Ben Gurion விமான நிலைய அறிவிப்புப் பலகையில் இடம்பெற்றுள்ளது.
சில நிறுவனங்கள் நாளை வரை சேவைகளை ரத்துச் செய்துள்ளன.
இஸ்ரேலின் பாதுகாப்பு நிலவரத்தை விமான நிறுவனங்கள் கூர்ந்து கவனித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.