ஓசூர்-கர்நாடகா எல்லையில் உள்ள பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து!

#Tamil Nadu #Accident #2023 #fire #Breakingnews #ImportantNews #Karnataka
Mani
2 years ago
ஓசூர்-கர்நாடகா எல்லையில் உள்ள பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து!

கர்நாடகா எல்லையில் உள்ள அத்திப்பள்ளி பகுதியில் நவீன் என்பவர் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் இன்று மாலை அந்த கடையில் எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டதால் பல்வேறு திசைகளில் பட்டாசுகள் வெடித்துச் சிதறின.

இதனால், பட்டாசு கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி, இரண்டு கனரக வாகனங்கள், மூன்று இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது. மேலும், இந்த சம்பவத்தில் பட்டாசு கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர் ஒருவர் உட்பட 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதனிடையே, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெடி விபத்து காரணமாக ஓசூர்-கர்நாடகா எல்லைப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4