ஒற்றை எதிரிகூட உயிர்பிழைக்க வாய்ப்பிருக்காது - புட்டின்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஒற்றை எதிரிகூட உயிர்பிழைக்க வாய்ப்பிருக்காது - புட்டின்!

ஒற்றை எதிரி கூட உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்காது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் வேலைகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். 

பத்திரிகையாளர்களின் வருடாந்திர சந்திப்பில் நேற்று கலந்து கொண்டு பேசிய புடின், Burevestnik என்ற அணுசக்தி திறன் கொண்ட பல ஆயிரம் கிலோ மீட்டர் பறந்து சென்று இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் க்ருஸ் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக தெரிவித்தார். 

 மேலும் சர்மாட் என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வருங்காலத்தின் தலைசிறந்த அணு ஆயுதமாக இருக்கும் என்றும் , ஒற்றை எதிரி கூட உயிர் பிழைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

ரஷ்யாவிற்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்த சரியான திட்டம் யாருக்கும் கிடையாது, அப்படி யாருக்கேனும் அந்த எண்ணம் இருந்தால் ரஷ்யாவின் பல ஏவுகணைகள் எதிரிகளின் வானில் பாயும்.   அதில், ஒற்றை எதிரி கூட உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்காது என புடின் தெரிவித்துள்ளார். 

 அத்துடன் அமெரிக்கா அணு ஆயுத சோதனையை தடை செய்யும் ஒப்பந்தத்தை அமெரிக்கா ஏற்கவில்லை, ஆனால் ரஷ்யா அதை ஏற்று 1990ல் இருந்து அணு ஆயுத சோதனை எதையும் செய்யவில்லை. தேவைப்பட்டால் நாடாளுமன்ற ஒப்புதலுடன் அணு ஆயுத தடைக்கு வழங்கிய ஒப்புதலில் இருந்து ரஷ்யா வெளியேறும் எனவும் தெரிவித்தார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4