மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் கார்பன் பேனா
#SriLanka
#drugs
#Ciggerette
Prathees
2 years ago
இந்த நாட்களில் போதைப்பொருள் வியாபாரிகள் போதைப்பொருள் அடங்கிய சிகரெட்டுடன் கார்பன் பேனாவைப் பயன்படுத்துவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முதல் பார்வையில் இது பேனாவாக இருந்தாலும் அதனை அகற்றி அவதானிக்கும் போது அதில் போதை கலந்த சிகரெட் உள்ளதாகவும், சிறுவர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கடந்த 4ஆம் திகதி காலியை அண்மித்த பகுதியிலுள்ள பயிற்சி வகுப்பொன்றில் இவ்வாறான பேனா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.