உப புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் விடுமுறைகள் இரத்து!

#SriLanka #Railway #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
உப புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் விடுமுறைகள் இரத்து!

உப புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் விடுமுறைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். 

மேலும், இன்று (07.10) கடமையில் ஈடுபடவுள்ள அனைத்து உப புகையிரத கட்டுப்பாட்டாளர்களும் நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்குமாறும் அவர் விசேட அறிவித்தலை விடுத்துள்ளார். 

இதன்படி நியமிக்கப்பட்ட பணிநிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க சிரமப்படும் அதிகாரிகள் அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என ரயில்வே பொது மேலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செப்டெம்பர் 12ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றியுள்ள நிலையில், பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாத வகையில் தொடர்ச்சியான மற்றும் வினைத்திறனான சேவையை பேணுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

புகையிரத சேவையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும், அவ்வாறு செய்யத் தவறும் அனைத்து அதிகாரிகளுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!