நாட்டின் சில பகுதிகளுக்கு 03 ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை!

#SriLanka #weather #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நாட்டின் சில பகுதிகளுக்கு 03 ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு 3 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதன்படி காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக காலி மாவட்டத்தின் எல்பிட்டிய மற்றும் நாகொட பகுதிகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, வலல்லாவிட்ட, மத்துகம மற்றும் மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்தர ஆகிய பிரதேசங்களுக்கும்இவ்வாறாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கிங், களு, நில்வள மற்றும் அத்தனகலு ஓயாவை சுற்றியுள்ள தாழ்நிலங்களில் வெள்ளம் பெருக்கெடுக்கும் அபாயம் இன்னும் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4