சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு!

#India #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு!

வெள்ளம் பெருக்கெடுத்து, இரு கரைகளையும் உடைத்து, நான்கு மாவட்டங்களில், குறிப்பாக கேங்டாக், மங்கன், பாக்கியாங், மற்றும் நாம்சி ஆகியவற்றில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மேலும், மாநிலத்தில் 14 பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளன. இதனால் போக்குவரத்து முடங்கி உள்ளது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான நபர்கள் தற்போது காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தால் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

சிக்கிமில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4