ஜம்மு காஷ்மீரில் சக வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ அதிகாரி!

#India #GunShoot #2023 #Tamilnews #Breakingnews #IndianArmy #ImportantNews
Mani
2 years ago
ஜம்மு காஷ்மீரில் சக வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ அதிகாரி!

ஜம்மு காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் மாவட்டத்தில் உள்ள இந்திய ராணுவ முகாமில் நேற்று காலை வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் ராணுவத்தின் முக்கிய பணியில் இருக்கும் அதிகாரி ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தார். இதனால் சக வீரர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடினர். திடீரென்று, அவர் கையெறி குண்டுகளை வீசத் தொடங்கினார், இதன் விளைவாக மூன்று உயர் அதிகாரிகள் மற்றும் ஐந்து வீரர்கள் காயமடைந்தனர். பின்னர் ஒரு வழியாக அந்த அதிகாரியை சரணடைய செய்தார்கள்.

இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறும் போது, துப்பாக்கி சுடுதல் பயிற்சியின் போது அதிகாரி ஒருவர் எந்த வித தூண்டுதலும் இன்றி திடீரென சக வீரர்கள் மீது கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுடவும் ஆரம்பித்தார். இதனை கண்ட சக அதிகாரிகள் ஒருவழியாக அவரை சரணடைய செய்தார்கள். இந்த பதட்டமான சூழ்நிலை சுமார் 8 மணி நேரம் நீடித்தது, என்று அவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4