நாட்டில் இடியுடன் கூடிய மழை தொடரும்!

#SriLanka #weather #Rain
Mayoorikka
2 years ago
நாட்டில் இடியுடன் கூடிய மழை தொடரும்!

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (06) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

 காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளில் மி.மீ. 50க்கு மேல் பலத்த மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள், பொலன்னறுவை, மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!