கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் - வெளியானது அறிவிப்பு!

#SriLanka #prices #Chicken
PriyaRam
2 years ago
கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் -  வெளியானது அறிவிப்பு!

இலங்கையில், எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், இதன்படி, 1 கிலோ கிராம் கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு வழங்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கால்நடை தீவனத்திற்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களும் மக்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 தேவைப்பட்டால் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4