பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட வெற்றி - கைவிடப்பட்டது வேலைநிறுத்தம்!

#SriLanka #strike #Railway
PriyaRam
2 years ago
பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட வெற்றி -  கைவிடப்பட்டது வேலைநிறுத்தம்!

ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவுடன் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததையடுத்து அவர்கள் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.

இதேவேளை, ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்களின் விடுமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்யப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் இன்று தெரிவித்திருந்தார்.

 இன்று கடமையில் ஈடுபடத் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து உப கட்டுப்பாட்டாளர்களும் நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்குமாறும் ரயில்வே பொது முகாமையாளர் கோரிக்கை விடுத்திருந்த பின்புலத்தில் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் பிரகாரம் ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்கள் தமது வேலைநிறுத்தத்தை கைவிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!