யாழ்ப்பாண மக்களே அவதானம்: பரவி வரும் நோய் ஆபத்து

#SriLanka #Jaffna #Health #Hospital #doctor #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாண  மக்களே அவதானம்: பரவி வரும் நோய் ஆபத்து

யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் வழமைக்கு மாறான கடும் காற்றுடனான காலநிலை காரணமாக குறிப்பாக வடமராட்சி, வலிகாமம் பிரதேச மாணவர்கள் மத்தியில் கண் நோய் பரவி வருவது அவதானிக்க்ப்பட்டுள்ளது.

 கண் கடுமையாக சிவப்படைந்து, கண்ணில் பீழை தள்ளி, கண்ணில் நீர் சொரிவதுடன், கண்ணில் சிறியளவிலான வலியும் நோய் அறிகுறிகளாக உள்ளன.

 குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவி வரும் இந்த தொற்று நோய் தொடர்பில் அவதானமாக இருப்பதுடன் மேற்கண்ட அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடுமாறு பொது சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளார்கள்.

 குறித்த கண்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சுத்தமான கைக்குட்டையினை பயன்படுத்துமாறும், வெயில், தூசிகளுக்குள் செல்வதனை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

 இதேவேளை தற்பொழுது நிலவும் காலநிலை மாற்றத்தினால் குழந்தைகளிடையே தொற்றுநோய் பரவுவதாகவும் குழந்தைகள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் கொழும்பு லேடி ரிஷ்வே மருத்துவர் வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!