இந்தியா குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வழங்கிய உறுதி
#India
#PrimeMinister
#Canada
#government
#D K Modi
Prasu
2 years ago
கனடாவின் ஒட்டாவா நகரில் பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் இந்தியாவில் இருக்கும் கனடா தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற இந்தியா வலியுறுத்தியதாக வெளியான தகவல் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதிலளித்து பேசுகையில், "கனடாவுக்கு இந்தியாவில் தூதரக அதிகாரிகள் இருப்பது முக்கியம். வெளிப்படையாக, நாங்கள் இப்போது இந்தியாவுடன் மிகவும் சவாலான நேரத்தைக் கடந்து வருகிறோம். ஆனால் நிலைமையை மோசமடைய செய்ய நாங்கள் விரும்பவில்லை.
இந்த கடினமான நேரத்தில் இந்தியாவுடன் ஆக்கபூர்வமான உறவை தொடர்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அந்த முக்கியமான பணியை நாங்கள் தொடர்ந்து செய்யப்போகிறோம்" என்றார்.