மேலும் சில பொருட்களுக்கான வரியை குறைக்க நடவடிக்கை!

#SriLanka #Sri Lanka President #taxes #Tamil #Import #Tax
Mayoorikka
1 year ago
மேலும் சில பொருட்களுக்கான வரியை குறைக்க நடவடிக்கை!

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் மேலும் பல பொருட்களுக்கான வரிகளைக் குறைப்பதற்கும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

 2023ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் திகதி 2338/54 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை பற்றிக் கலந்துரையாடும்போதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.

 இதற்கு அமைய 15% ஆக இருந்த வரி விகிதம் 5% ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

 அதற்கான அனுமதியை வழங்கிய குழு, இந்த வர்த்தக ஒப்பந்தத்தினால் இலங்கைக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தது.

 இது விடயத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய குழுவின் தலைவர், இந்த ஒப்பந்தம் குறித்த தர்க்கரீதியான விடயங்களை முன்வைத்து 6 வாரங்களுக்குள் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துக்குப் பொறுப்பான அதிகாரிக்குப் பணிப்புரை விடுத்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!