ஏற்றுமதி குறைவுக்கான காரணம் வெளியீடு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஏற்றுமதி குறைவுக்கான காரணம் வெளியீடு!

2023 ஆம் ஆண்டில் ஒரு மாதத்தில் ஈட்டிய அதிகூடிய ஏற்றுமதி வருமானம் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

அந்த மாதத்தில்,  1,119 மில்லியன் டொலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது கடந்த வருடம் (2022) ஒகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில்,  8.7% குறைவு என இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை, 2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் நாட்டின் ஏற்றுமதி வருமானம் 8,010 மில்லியன் டொலர்களாகும். 2022 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 10.1% குறைவு எனவும் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

வெளிநாட்டு சந்தையில் குறிப்பாக ஆயத்த ஆடைகளுக்கான தேவை குறைந்தமையே ஏற்றுமதி வருமானம் குறைவதற்கான பிரதான காரணம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4