இந்திய பெருங்கடலை வந்தடைந்த சீன ஆராய்ச்சி கப்பல் : இலங்கைக்குள் அனுமதிக்கப்படுமா?

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இந்திய பெருங்கடலை வந்தடைந்த சீன ஆராய்ச்சி கப்பல் : இலங்கைக்குள் அனுமதிக்கப்படுமா?

சீன கடல் ஆராய்ச்சிக் கப்பல் ஷி யான் 6 தற்போது இந்தியப் பெருங்கடலை வந்தடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  

குறித்த கப்பலை இலங்கையில் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டதாக முன்னர் கூறப்பட்டபோதிலும், தற்போது அனுமதிவழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 

எவ்வாறாயினும், கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பது தொடர்பில் உத்தியோகபூர்வ பதில் எதுவும் தெரிவிக்கப்படாத பின்னணியில் ஷி யான் 6 ஆய்வுக் கப்பல் இலங்கை நோக்கி பயணிப்பதாக இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன. 

எதிர்வரும் ஒக்டோபர் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் ஜனாதிபதியின் சீன விஜயத்தின் பின்னர் குறித்த கப்பலை நாட்டுக்குள் அனுமதிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.   

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!