கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட குற்றவாளி

#Arrest #Murder #Court Order #America #Case
Prasu
2 years ago
கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட குற்றவாளி

ராப் இசை கலைஞர் Tupac Shakurஐ கொலை செய்ததாக அமெரிக்காவின் முன்னாள் கும்பல் தலைவர் ஒருவரை அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நியூயார்க்கில் நகரில் பிறந்த , 25 வயது நிரம்பிய ஹிப்-ஹாப் லெஜண்ட் Tupac Shakur , லாஸ் வேகாஸில் நான்கு முறை சுடப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவர் கொலை செய்யப்பட்டு 27 ஆண்டுகளுக்குப் பிறகு 60 வயதான Duane "Keff Dee" Davis நேற்று (29) கைது செய்யப்பட்டார்.

ஒரு சூதாட்ட விடுதியில் தனது மருமகனுக்கு Tupac Shakur உடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பின்னர் அவர் குறித்த துப்பாக்கிச் சூட்டைத் திட்டமிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, Duane "Keff Dee" Davis தனது லாஸ் வேகாஸ் வீட்டிற்கு அருகே நேற்று (29) கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் சில நாட்களில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 Tupac Shakur இன் கொலையை பல ஆண்டுகளாக விசாரித்து வந்த ஓய்வுபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸின் துப்பறிவாளர் கிரெக் கேடிங் என்பவர், " Davis கைது செய்யப்பட்டதில் ஆச்சரியமில்லை, மற்ற அனைத்து நேரடி சதிகாரர்கள் உயிரிழந்து விட்டனர்," என்று வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4