கனடாவில் பௌத்த வழிபாட்டுத் தலங்களை உடைத்த இருவர்

#Police #Canada #Temple #Attack #Buddha
Prasu
2 years ago
கனடாவில் பௌத்த வழிபாட்டுத் தலங்களை உடைத்த இருவர்

கனடாவில் பௌத்த வழிபாட்டுத் தலங்களை உடைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இருவரை கைது செய்ய நாடு முழுவதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 21, 2023 மற்றும் செப்டம்பர் 28, 2023 க்கு இடையில், Markham மற்றும் Whitchurch-Stouffville ஆகிய இடங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் ஆறு தடவை உடைப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. 

இதில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இது குறித்த விசாரணையானது குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரு சந்தேக நபர்களை கண்டறிய உதவியது. 

அவர்கள் நிலையான முகவரி இல்லாத 27 வயதான அயன் சவேரியு மற்றும் நிலையான முகவரி இல்லாத 27 வயதான வாசிலி ஸ்டீபன் என அடையாளம் காணப்பட்டனர். 

 இரண்டு பேரும் தலா இரண்டு வழக்குகளை எதிர்கொள்கிறார்கள் சந்தேக நபர்கள் அடர் நிற SUV, வெள்ளை நிற ஹூண்டாய் எலன்ட்ரா மற்றும் வெள்ளி நான்கு கதவுகள் கொண்ட டொயோட்டா கொரோலா போன்ற மூன்று வாகனங்களை வைத்திருந்தார்கள் என கூறப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4