தனது மகளின் இறப்பு குறித்து மனம் திறந்த விஜய் ஆண்டனி

#Cinema #Actor #TamilCinema #2023 #Tamilnews #Movie
Mani
2 years ago
தனது மகளின் இறப்பு குறித்து மனம் திறந்த விஜய் ஆண்டனி

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது பிஸியான நடிகராக வலம்வருபவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது C.S.அமுதன் இயக்கத்தில் ரத்தம் என்கிற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று(செப்.29) நடைபெற்றது.

சில தினங்களுக்கு முன் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 12ஆம் வகுப்பு படித்த அவர் மன அழுத்த காரணமாக இந்த முடிவை எடுத்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இதுக்குறித்து பேசிய விஜய் ஆண்டனி கூறியதாவது, “என் வாழ்கையில் சிறுவயதிலிருந்தே பல கஷ்டங்கள், காயங்களை பார்த்துவிட்டேன், நிறைய காயம் பட்டு பட்டு மரத்துவிட்டது. வாழ்கையில் எல்லா திசைகளையும் பார்த்து விட்டேன். வாழ்வில் எதையும் மறக்க வேண்டிய அவசியம் இல்லை. வாழ்கையே ஞாபகம்தான். மறக்க நினைக்க மாட்டேன், வலி ஏற்பட்டாலும் அதோடு வாழ நினைப்பேன்” என கூறியுள்ளார். விஜய் ஆண்டனியின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!