வெளிநாடுகளுக்கு பிச்சைக்காரர்களை நாடு கடத்தும் பாகிஸ்தான்

#world_news #Pakistan #beggars #deports #abroad
Prasu
2 years ago
வெளிநாடுகளுக்கு பிச்சைக்காரர்களை நாடு கடத்தும் பாகிஸ்தான்

வெளிநாடுகளில் கைது செய்யப்பட்ட பிச்சைக்காரர்களில் 90 சதவீதம் பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று பாகிஸ்தானின் ஆங்கில மொழி செய்தித்தாள் தி டான் தெரிவித்துள்ளது. “பாகிஸ்தானிலிருந்து அதிக எண்ணிக்கையில் பிச்சைக்காரர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதாக தெரிவிக்கப்பட்டது, 

இது ‘மனித கடத்தலை’ தூண்டியுள்ளது” என்று அறிக்கை .தெரிவித்துள்ளது. வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் சுல்பிகர் ஹைதர், செனட் குழுவில் திறன்மிக்க மற்றும் திறமையற்ற தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பான விவாதத்தின் போது இதனைத் தெரிவித்தார்.

மேலும், சவுதி அரேபியா, ஈரான், ஈராக் போன்ற நாடுகளுக்குள் நுழைவதற்காக பல பிச்சைக்காரர்கள் யாத்திரை விசாவைப் பயன்படுத்திக் கொள்வதும் தெரியவந்தது. 

அதிர்ச்சியூட்டும் வகையில், புனித தலங்களில் கைது செய்யப்பட்ட கணிசமான எண்ணிக்கையிலான பிக்பாக்கெட்டுகளும் பாகிஸ்தானியர்கள் என அடையாளம் காணப்பட்டது. 

 திறமையான தொழிலாளர்களை ஏற்றுமதி செய்வதில் பாகிஸ்தானின் வரலாற்றுப் பங்கை வலியுறுத்திய அவர், தொழில் வல்லுநர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அந்நாட்டின் வெளிநாட்டுப் பணம் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

மேலும் ஏறத்தாழ மூன்று மில்லியன் மக்கள் சவூதி அரேபியாவில் இருப்பதாகவும், 1.5 மில்லியன் பாகிஸ்தானியர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருப்பதாகவும், 0.2 மில்லியன் பேர் கத்தாரில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4