வாகன இறக்குமதிக்காக வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கை தொடர்பில் விசேட தீர்மானம்
#SriLanka
#Import
#Ranjith Siambalapitiya
#vehicle
Prathees
2 years ago
இலங்கைக்கு பல வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை தொடர்பில் மீண்டும் கவனம் செலுத்தவுள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த சுற்றறிக்கை மூலம் 10 ஆண்டுகள் பழமையான லொறிகள் மற்றும் டிரக் வண்டிகள் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இதன் மூலம் இலங்கைக்கு பழைய வாகனங்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதால், நிபந்தனைகள் குறித்து மீள்பரிசீலனை செய்யப்படும் என பதில் நிதியமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, Fitch Rating Institute இலங்கையின் கடன் மதிப்பீடு தொடர்பில் 02 அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நீண்ட கால உள்ளூர் நாணய வெளியீட்டு மதிப்பீடு அதன் முந்தைய மதிப்பான வரையறுக்கப்பட்ட இயல்புநிலையிலிருந்து மேம்படுத்தப்பட்டுள்ளது.