பங்களாதேஷில் டெங்கு நோயால் 1000 பேர் உயிரிழப்பு

#Death #Hospital #Disease #Bangladesh #Rescue #Dengue
Prasu
2 years ago
பங்களாதேஷில் டெங்கு நோயால் 1000 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷில் டெங்கு காய்ச்சலினால் சுமார் 1000 பேர் உயிரிழந்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, இந்நிலைமை மேலும் அதிகரிக்கலாம் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 அண்மைய தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் பருவ மழைக் காரணமாக டெங்கு நுளம்புகளை உருவாகக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த நோயைக் கட்டுப்படுத்த அந்நாட்டு வைத்தியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

 இதன் காரணமாக அந்நாட்டு வைத்தியசாலைகள் நிரம்பி வழிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 பங்களாதேஷில் பருவகால நோயாக டெங்கு நோய் காணப்பட்டாலும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பமான மற்றும் ஈரலிப்பான பருவங்கள் காரணமாக இது அடிக்கடி ஏற்படும் நோயாக மாறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4