11வது முறை பாதுகாவலரை கடித்த ஜோ பைடனின் வளர்ப்பு நாய்
#Police
#America
#people
#world_news
#International
#President
#2023
#Security
Mani
2 years ago
அமெரிக்காவில் அதிபர், துணை அதிபர், முன்னாள் அதிபர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் ஜெர்மன் ஷெப்பர்டு நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படை ஊழியரை நாய் கடித்துள்ளது. உடனடியாக அந்த பாதுகாவலருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர், அவர் தற்போது நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளை மாளிகைக்கு இந்த நாய் வந்தது முதல் 2022-ம் ஆண்டு நவம்பர் வரை 10 முறை இது போன்று பாதுகாவலர்களை கடித்துள்ளது. இருப்பினும், நேற்று 11வது முறையாக பாதுகாவலரை கடித்துள்ளது.