உஸ்பெகிஸ்தானில் உள்ள விமான நிலையத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு; பல நபர்கள் காயம்

#Airport #Accident #people #world_news #BombBlast #2023 #Tamilnews #Injury #Bomb
Mani
2 years ago
உஸ்பெகிஸ்தானில் உள்ள விமான நிலையத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு; பல நபர்கள் காயம்

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்கண்ட்டில் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள சுங்கக் கிடங்கில் நள்ளிரவில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த குண்டு வெடிப்பில் பலருக்கு காயம் ஏற்பட்டது, பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த குண்டு வெடிப்பின் போது அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தீ பற்றியது. காயமடைந்தவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4