வெவ்வேறு பிரதேசங்களில் ரயிலுடன் மோதி 06 யானைகள் பலி!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#news
Thamilini
2 years ago
ரயிலில் மோதுண்டு 06 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்கமுவ மற்றும் ஹபரணை பிரதேசங்களில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (27.09) நள்ளிரவு 12 மணியளவில் கொழும்பில் இருந்து காங்கசந்துறை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் புகையிரதத்துடன் மோதி 03 யானைகள் உயிரிழந்துள்ளன.
அதேபோல் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகயா புகையிரதத்தில் ஹபரணை பலுகஸ்வெவ பிரதேசத்தில் இரண்டு காட்டு யானைகள் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தின் போது ஒன்றரை மாதக் குட்டி யானை ஒன்றும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.