தனுஷ்க்க குணாதிலக தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!
#SriLanka
#Sri Lanka President
#Srilanka Cricket
#Minister
#sports
Mayoorikka
2 years ago
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விதித்துள்ள தடையை நீக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் இருந்து தனுஷ்க குணதிலக்க விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணைகள் தொடர்ச்சியாக 4 நாட்களாக சிட்னியில் இடம்பெற்றன.
இந்த நிலையில் சாட்சி கோரல்கள் மற்றும் எழுத்துமூல சமர்ப்பனங்கள் கடந்த 4 நாட்களாக நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட நிலையில் தனுஷ்க குணதிலக்க குற்றமற்றவர் என நீதிபதி சாரா ஹகெட் தீர்ப்பு வழங்கினார்.