மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்! தனுஷ்க்க

#SriLanka #Sri Lanka President #Srilanka Cricket #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்! தனுஷ்க்க

அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னி நீதிமன்றத்தால் குற்றச்சாட்டில் நிரபராதி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். 

 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் முதல் முறையாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் வீரர், "தீர்ப்பே அனைத்தையும் தெளிவுபடுத்திக் கூறுகிறது" என்றார். 

 “கடந்த பதினொரு மாதங்கள் எனக்கு கடினமாக இருந்தது. எனது முகாமையாளர், எனது வழக்கறிஞர்கள், குறிப்பாக முருகன் தங்கராசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

 எனக்கு உதவிய அவுஸ்திரேலியாவில் உள்ள அனைவருக்கும், எனது பெற்றோருக்கும் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சிலருக்கும் நன்றி கூறுகிறேன். எல்லோரும் என்னை நம்பினார்கள், அது எனக்கு மிகவும் பெறுமதியான விடயம், ”என்று அவர் கூறினார். 

 “எனது வாழ்க்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

 திரும்பி நாட்டுக்குச் சென்று கிரிக்கெட் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!