சீனாவின் எச்சரிக்கையை மீறி தைவான் சென்ற ஆஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள்

#China #Parliament #Australia #Warning #Thaiwan #Visit
Prasu
2 years ago
சீனாவின் எச்சரிக்கையை மீறி தைவான் சென்ற ஆஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள்

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் கடந்த 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. எனினும் சமீபகாலமாக தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என சீனா கருதுகின்றது. 

மேலும் தைவானுடன் மற்ற நாடுகள் தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில் சீனாவின் எச்சரிக்கையை மீறி ஆஸ்திரேலியாவில் இருந்து 6 எம்.பி.க்கள் கொண்ட ஒரு குழுவினர் தைவான் பயணம் மேற்கொண்டுள்ளனர். 

தைவானுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, எரிசக்தி மற்றும் செமி-கண்டக்டர் துறை போன்றவை குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, ஆஸ்திரேலியாவின் பார்லி போன்ற ஏற்றுமதி பொருட்களுக்கு கூடுதலாக வரி விதித்துள்ளது. கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த சர்ச்சையால் சீனா-ஆஸ்திரேலியா உறவில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டது. 

அதனை மறுசீரமைக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது எம்.பி.க்களின் இந்த பயணத்தால் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4