குழந்தைகளின் புகைப்படத்தை பகிர்ந்த விக்னேஷ் சிவன்

#India #Cinema #Actor #Actress #TamilCinema #2023 #baby
Mani
2 years ago
குழந்தைகளின் புகைப்படத்தை பகிர்ந்த விக்னேஷ் சிவன்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி தங்களுடைய இரட்டை குழந்தைகளின் முதல் பிறந்த நாளை இன்று கொண்டாடினார்கள். நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து மணந்தார். இவர்களுக்கு வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இந்த குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என பெயர்கள் வைத்தார். இந்நிலையில், விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தங்கள் மகன்கள் உயிர் மற்றும் உலகத்தின் முதல் பிறந்தநாளை மலேசியாவில் கொண்டாடி உள்ளனர். அங்குள்ள புகழ்பெற்ற டுவின் டவர் முன் மகன்களை தோழில் தூக்கி வைத்தபடி போட்டோ எடுத்து தன் மகன்களுக்கு ஸ்பெஷலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் விக்கி.

அதேபோல் மற்றொரு பதிவில் தன் மகன்களை மனதில் வைத்து எழுதிய ஜெயிலர் படத்தில் இடம்பெறும் ரத்தமாரே பாடலில் ‘என் முகம் கொண்ட என் உயிரே, என் குணம் கொண்ட என் உலகே’ என தன் மகன்களின் பெயர்களோடு கூடிய வரிகளை பதிவிட்டு எமோஷனலாக வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் விக்கி. மகன்களின் முதல் பிறந்தநாளுக்காக விக்கி நயன் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!